கோல் கீப்பரை ஏமாற்றி 3000வது கோல் அடித்த எம்பாப்பே! கட்டிப்பிடித்து நெகிழ்ந்த மெஸ்ஸி
லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது.
சோலர் அபார கோல்
Stade Francis-Le Ble மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், PSG-யின் 37வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் கோல் அடித்தார். எம்பாப்பே கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், அது திரும்பி வந்தபோது விரைந்து செயல்பட்ட சோலர் அதனை கோலாக மாற்றினார்.
அதன் பின்னர் 43வது நிமிடத்தில் பிரெஸ்ட் அணி வீரர் பிராங்க் வெகு தூரம் துரத்திச் சென்று பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் ஆட்டம் சமனில் இருந்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் கோல் எதும் விழவில்லை.
@FRED TANNEAU / AFP / Getty
3000வது கோல்
ஆனால், கடைசி நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைனின் நட்சத்திர வீரர் எம்பாப்பே, ஒற்றை ஆளாக பாதி ஆடுகளத்தில் இருந்து பந்தை விரட்டி சென்றார். கோல் கீப்பரின் அருகில் சென்றவுடன் தந்திரமாக அவரை ஏமாற்றி கோல் அடித்தார்.
இது பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியின் வரலாற்றில் 3000வது கோல் ஆகும்.
மேலும் லீக் 1 தொடரில் அதிக கோல்கள் அடித்த கவானியின் சாதனையை எம்பாப்பே சமன் செய்தார். இருவரும் லீக் 1 தொடரில் இதுவரை 138 கோல்கள் அடித்துள்ளனர்.
எம்பாப்பே கோல் அடித்தவுடன் மற்றொரு நட்சத்திர வீரர் மெஸ்ஸி அவரை கட்டியணைத்து நெகிழ்ந்த தருணம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
@ Twitter @PSG_espanol
இறுதியில் பாரிஸ் செயின்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது. கடந்த போட்டியில் பாயர்ன் முனிச்சிடம் தோல்வியடைந்த நிலையில், தற்போது PSGயின் இந்த வெற்றி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
Le 3000e but parisien en première division pour @KMbappe ! ⚽️#SB29PSG
— Paris Saint-Germain (@PSG_inside) March 11, 2023