இரட்டை கோல் அடித்த எம்பாப்பே! பார்சிலோனோவை பந்தாடி அரையிறுதிக்கு நுழைந்த PSG
சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
காலிறுதிப் போட்டி
Estadi Olimpic Lluis Companys மைதானத்தில் நடந்த UEFA சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில், பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (Paris Saint Germain) மற்றும் பார்சிலோனா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் பார்சிலோனா (Barcelona) அணியின் ராபின்ஹா அபாரமாக முதல் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, PSG அணியின் Ousmane Dembele 40வது நிமிடத்தில் பதிலடி கோல் அடித்தார்.
முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் PSG அணி ஆதிக்கம் செலுத்தியது.
கைலியன் எம்பாப்பே
61வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) கோல் அடித்தார்.
பின்னர் 89வது நிமிடத்தில் அவரே அசத்தலாக கோல் அடிக்க, PSG அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி, 30ஆம் திகதி நடைபெற உள்ள முதல் லெக்கில் டோர்ட்மண்ட் அணியை எதிர்கொள்கிறது.
Une bonne nuit à ceux qui vont trouver le sommeil ! ?
— Paris Saint-Germain (@PSG_inside) April 17, 2024
Bon courage ! ❤️? pic.twitter.com/hlh1gZhd0s
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |