கால்பந்து அரசன் மறைந்தாலும் அவரது மரபு அழியாது! பீலேவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் எம்பாப்பே இரங்கல்
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மரணத்திற்கு கைலியன் எம்பாப்பே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீலேவின் மறைவு
கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரராக கொண்டாடப்படும் பிரேசிலின் பீலே, தனது 82வது வயதில் மரணமடைந்தார்.
அவரது இறப்பு கால்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பீலேவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்பாப்பே இரங்கல்
அந்த வகையில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே தனது ட்விட்டர் பக்கத்தில் பீலேவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
The king of football has left us but his legacy will never be forgotten.
— Kylian Mbappé (@KMbappe) December 29, 2022
RIP KING ??… pic.twitter.com/F55PrcM2Ud
அத்துடன் அவரது இரங்கல் பதிவில், 'கால்பந்து அரசன் நம்மை விட்டு நீக்கினாலும், அவரது மரபு எப்போதும் மறக்காது. அரசனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
@AFP / FRANCK FIFE