கவலைப்படாதே சகோதரா, நீ வரலாறு படைத்திருக்கிறாய்! உலகக்கோப்பை தோல்வியால் கதறிய எதிரணி வீரருக்கு Kylian Mbappe-வின் ஆறுதல்
கத்தார் உலகக்கோப்பையின் அரையிறுதியில் தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்த மொராக்கோ வீரருக்கு, பிரான்ஸ் நட்சத்திர வீரர் Kylian Mbappe ஆறுதல் கூறி ட்வீட் செய்துள்ளார்.
பிரான்ஸ் வெற்றி
AL Bayt மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது.
சாம்பியன் அணிகளை தோற்கடித்துவிட்டு அரையிறுதிக்கு வந்த மொராக்கோ, கோல் ஏதும் அடிக்காமல் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் வீரர்கள் மனமுடைந்தனர்.
கதறி அழுத ஹகிமி
குறிப்பாக, மொராக்கோவின் நட்சத்திர வீரர் அகிராஃப் ஹகிமி கண் கலங்கி சோகத்தை வெளிப்படுத்தினார். அப்போது பிரான்ஸ் வீரர் Kylian Mbappe அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
ஆனாலும் அவர் சோகத்தில் மூழ்கியதால் தனது உடையை கழற்றி அவருக்கு கொடுத்தார். பதிலுக்கு ஹகிமியும் தனது ஜெர்சியை கொடுத்தார்.
Mbappe கூறிய ஆறுதல்
இந்த நிலையில், Kylian Mbappe தனது ட்விட்டர் பக்கத்தில் ஹகிமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.
அவரது பதிவில், 'கவலைப்படாதே சகோதரா , நீங்கள் செய்ததை நினைத்து எல்லோரும் பெருமையடைந்துள்ளனர். நீங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள் ஹகிமி' என தெரிவித்துள்ளார்.
Don’t be sad bro, everybody is proud of what you did, you made history. ❤️ @AchrafHakimi pic.twitter.com/hvjQvQ84c6
— Kylian Mbappé (@KMbappe) December 14, 2022
@AP