பெனால்டியில் கோல் அடித்த எம்பாப்பே! சாம்பியன்ஸ் லீக்கில் PSG மிரட்டல் வெற்றி
UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
UEFA லீக்
Parc des Princes மைதானத்தில் நடந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் டோர்ட்மண்ட் அணிகள் மோதின.
Twitter (@PSG_inside)
முதல் பாதியில் டோர்ட்மண்ட் அணி கடுமையாக நெருக்கடி கொடுத்ததால் PSG அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
அதன் பின்னர் நடந்த இரண்டாம் பாதியின் 49 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் எம்பாப்பே பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
எதிரணி வீரரின் கையில் பந்து பட்டதால் PSGக்கு இந்த பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
ஹக்கிமி கோல்
அடுத்து ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் PSGயின் மற்றொரு நட்சத்திர வீரரான அச்ராஃப் ஹக்கிமி அசத்தலாக கோல் அடித்தார்.
இதன்மூலம் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் டோர்ட்மண்ட்-ஐ வீழ்த்தியது.
UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய PSG அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |