ஐரோப்பாவிலேயே பெருந்தொகை சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்கள்... யார் முதலிடம்
யூரோ கிண்ணம் கால்பந்து தொடர் நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பாவிலேயே தற்போது பெருந்தொகை சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
மூன்று மடங்கு அதிக சம்பளம்
முதல் வரிசையில், Kylian Mbappe, Harry Kane, Kevin De Bruyne, Erling Haaland ஆகியோர் இடம்பெறலாம் என மக்கள் எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில் 25 வயதான கைலியன் எம்பாப்பே தமக்கு அடுத்த வரிசையில் இருக்கும் வீரரை விடவும் மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறார். அதாவது மாதம் 5.15 மில்லியன் பவுண்டுகள் தொகையை எம்பாப்பே சம்பளமாக வாங்குகிறார்.
ஆண்டுக்கு 61.8 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹரி கேன் உள்ளார். இவர் மாதம் 1.8 மில்லியன் பவுண்டுகளை சம்பளமாக பெறுகிறார்.
மூன்றாவது இடத்தில் மன்செஸ்டர் சிட்டி வீரர்கள் Kevin De Bruyne(1.73 மில்லியன் பவுண்டுகள் ) மற்றும் Erling Haaland (1.63 மில்லியன் பவுண்டுகள் ) ஆகியோரும் உள்ளனர். ஆனால் எர்லிங் ஹாலண்ட் பெருந்தொகை போனஸ் வகையில் பெறுவதால், அவர் மாதம் 3.4 மில்லியன் பவுண்டுகள் பெறுகிறார்.
பத்தாவது இடத்தில் நால்வர்
ஐந்தாவது இடத்தில் 1.61 மில்லியன் பவுண்டுகளுடன் டேவிட் அலபா உள்ளார். 1.6 மில்லியன் பவுண்டுகள் தொகையுடன் 6வது இடத்தில் உள்ளார் Robert Lewandowski.7வது இடத்தில் 1.52 மில்லியன் பவுண்டுகள் சம்பளத்துடன் Mo Salah மற்றும் Casemiro ஆகிய இருவரும் உள்ளனர்.
9வது இடத்தில் 1.48 மில்லியன் பவுண்டுகளுடன் Raphaël Varane உள்ளார். பத்தாவது இடத்தில் 1.43 மில்லியன் பவுண்டுகள் சம்பளத்துடன் Vinicius மற்றும் Bellingham உட்பட நால்வர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |