சீறிப்பாய்ந்து இரட்டை கோல் அடித்த எம்பாப்பே! ரசிகர்கள் ஆர்ப்பரிப்பில் அதிர்ந்த மைதானம்
ரியல் சோசியேடட் அணிக்கு எதிரான போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மின்னல் வேகத்தில் கோல்
UEFA தொடரின் நேற்றையப் போட்டியில் PSG மற்றும் Real Sociedad அணிகள் மோதின. விறுவிறுப்பாக தொடங்கி இப்போட்டியின் 5வது நிமிடத்தில், PSG நட்சத்திரம் எம்பாப்பே அடித்த ஷாட் கோல் போஸ்டினை தாண்டி மேலே சென்றது.
அதனைத் தொடர்ந்து, விடாமுயற்சியாக 15வது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் ஷூட் செய்து கோல் அடித்தார். 29வது நிமிடத்தில் விரைந்து வந்து எம்பாப்பே அடித்த ஷாட்டை, எதிரணி கோல் கீப்பர் அபாரமாக செயல்பட்டு ஒற்றை காலினால் தடுத்தார்.
⏱ ??-?????
— Paris Saint-Germain (@PSG_inside) March 5, 2024
Les Parisiens regagnent les vestiaires avec un but d'avance dans ce match retour (0-3 sur l'ensemble des deux matches). ?#RSOPSG I #UCL ✨ pic.twitter.com/jKUSiGwqXI
தனியாளாக பாய்ந்து கோல் அடித்த எம்பாப்பே
முதல் பாதியில் PSG அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் 56வது நிமிடத்தில், மைதானத்தில் பாதியில் இருந்து தனியாளாக பந்தை கடத்திச் சென்ற எம்பாப்பே, மிரட்டலாக இரண்டாவது கோலினை அடித்தார்.
அதன் பின்னர் ரியல் சோசியேடட் வீரர் பர்ரேனே தலையால் முட்டி கோல் (63வது நிமிடம்) அடித்தார். ஆனால் Goal Chech செய்தபோது அது ஆஃப் சைடு கோல் என தெரிய வந்தது.
❤️ ALLEZ PARIS ?#RSOPSG I #UCL pic.twitter.com/pPHguT3plB
— Paris Saint-Germain (@PSG_inside) March 5, 2024
எனினும் துடிப்புடன் செயல்பட்ட அந்த அணி வீரர்களின் முயற்சியால் 89வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. அந்த அணியின் மிக்கேல் மெரினா, இடது காலால் சுழற்றி அடித்து கோலாக மாற்றினார்.
கடைசி மூன்று நிமிடங்களில் PSG தடுப்பாட்டம் ஆடியதால், ரியல் சோசியேடட் அணியில் 2வது கோல் அடிக்க முடியவில்லை. இதனால் PSG அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
✅❤️? GO en 1/4 de finale !! #championsLeague @PSG_inside pic.twitter.com/nwHDpNywUm
— Lucas Hernández (@LucasHernandez) March 5, 2024
? Full-time#UCL | #WeareReal pic.twitter.com/h8siQ7TqiP
— Real Sociedad ?? ?? (@RealSociedadEN) March 5, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |