உலகக்கோப்பை கால்பந்தில் புதிய வரலாறு படைத்த 23 வயது பிரான்ஸ் வீரர்
கத்தார் உலகக்கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது.
பெப்பே அதகளம்
அல் துமமா மைதானத்தில் நேற்று நடந்த சூப்பர் 16 ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் போலந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் பிரான்சின் ஒலிவர் கிரௌட் கோல் அடித்தார்.
அதற்கு போலந்து பதில் கோல் அடிக்காததால் பிரான்ஸ் முதல் பாதியில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் 74வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் கய்லியன் பெப்பே அபாரமாக கோல் அடித்தார்.
[0HA2K[
@Getty Images
அதனைத் தொடர்ந்து 90+1வது நிமிடத்தில் அவரே மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் 24 வயதிற்கு முன்பாக 8 கோல்கள் அடித்த வீரர் என்ற அரிய சாதனையை பெப்பே படைத்தார்.
பிரான்ஸ் வெற்றி
அதன் பின்னர் 90+9 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் செய்த Hand ball தவறினால் போலந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் கேப்டன் ராபர்ட் லேவாண்டோவ்ஸ்கி அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார்.
@Showkat Shafi/Al Jazeera
ஆனால் திருப்புமுனையாக, பிரான்ஸ் வீரர்கள் ஷாட் அடிக்கும் முன் கோட்டை தாண்டி வந்ததால் போலந்துக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லேவாண்டோவ்ஸ்கி கோல் அடித்தார். அத்துடன் ஆட்டநேரம் முடிந்ததால் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ், 11ஆம் திகதி நடக்கும் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
@Getty

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.