ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே
பிரான்ஸின் கால்பந்து நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே 2024 - 2025க்கான ஐரோப்பிய கிண்ண தொடருக்கு ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கிண்ண கால்பந்து தொடர் நிறைவடைந்த நிலையில் நடைபெறவுள்ள தொடரில் ரியல் மாட்ரிட் சார்பாக அவர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கழகத்துக்காக நடப்பு தொடரில் விளையாடிய அவரின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளார்.
GETTY IMAGES
கடந்த மாதம் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கழகத்தை விட்டு தான் விலகுவதாக அறிவித்த அவரின் கருத்தானது பிரான்ஸ் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் வாரம் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை பிரான்ஸுக்காக வென்றுக்கொடுத்த எம்பாப்பே, இளவயது கால்பந்து சாதனையாளர் எனவும் வர்ணிக்கப்படுகின்றார்.
அவர் 2029 ஆம் ஆண்டு வரை ரியல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ள நிலையில் , ஒரு தொடருக்கு 15 மில்லியன் யூரோக்கள் (இலங்கை பெறுமதி 4.9பில்லியனுக்கும் அதிக தொகை) வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Photograph: Franck Fife/AFP/Getty Images
மேலும் 150 மில்லியன் யூரோ கையொப்பமிடுதளுக்கு மேலதிக ஒப்பந்த தொகையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கிலியன் எம்பாப்பே தனது 19 ஆவது வயதில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியவர் ஆவார்.
மேலும் தனது 23ஆவது வயதில் உலகக்கோப்பையில் கோல்டன் பூட் விருதை தன்வசப்படுத்தியிருந்தார்.
1966க்கு பின்னர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் தன்வசம் கொண்டுள்ளார்.
பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலே 14 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி மொத்தம் 12 கோல்கள் அடித்துள்ள நிலையில் அதனை தனது இளம்வயதிலேயே எம்பாப்பே சமன் செய்துள்ளார்.
கட்டாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரில் அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையிலான இறுதிப் போட்டியை வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றியதில் கிலியன் எம்பாப்பேவிற்கு மிக முக்கிய பங்குண்டு.
2015ல் தனது 16 வயதில் Monaco கலகத்துக்காக விளையாடிய இவரது திறமையை கண்ட Monaco அணி 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது.
இவரது கோல் மழை Monaco அணியை பிரான்ஸின் உள்ளக தொடரான லீக் 1 கோப்பையை வெல்ல உதவியது. இதற்கிடையில் பிரான்ஸ் தேசிய அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்தார்.
படிப்படியாக தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்த அவர் பிரான்ஸ் தேசிய அணியில் 2017ஆம் ஆண்டு முதல்முறை விளையாடினார்.
மறுபுறம் லீக் 1 விளையாடும் முன்னணி கழகமான பி.எஸ்.ஜியில் விளையாடும் வாய்ப்பு எம்பாப்பேவிற்கு கிடைத்தது.
இந்த அணியில் ஆடி ஐரோப்பிய கழகங்களுக்கு எதிரான போட்டியில் கோல்களை அடித்து அசத்தியமை அவரது திறமையை மேலும் உலகறிய செய்திருந்தது.
இந்த சூழலில் 2018 ரஷ்ய உலகக்கோப்பை தொடருக்கான பிரான்ஸ் அணியில் இடம்பிடித்தார்.
?⚪️ Kylian Mbappé to Real Madrid, HERE WE GO! Every document has been signed, sealed and completed.
— Fabrizio Romano (@FabrizioRomano) June 2, 2024
Real Madrid, set to announce Mbappé as new signing next week after winning the Champions League.
Mbappé made his decision in February; he can now be considered new Real player. pic.twitter.com/MMqEp1C0pK
இந்த தொடரில் முதல் கோல், ஒரே போட்டியில் இரண்டு கோல், Man of the Match விருது, இறுதிப் போட்டியில் கோல், Best Young Player Award என வரிசையாக சாதனைகளை தன்வசப்படுத்திக்கொண்டே சென்றார்.
ஒருகட்டத்தில் உலகின் மிகப்பெரிய கால்பந்து கழகங்களாக விளங்கும் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முஞ்ச், லிவர்பூல் என பலரும் கிலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய முயற்சித்தனர்.
இந்நிலையில் பிரான்ஸின் முன்னணி கழகமான பி.எஸ்.ஜி அணி கிலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்து தங்கள் அணி வீரராகவே மாற்றியமைத்தது.
தற்போது லீக் 1, சாம்பியன்ஸ் லீக், UEFA தொடர் , பிரான்ஸ் தேசிய அணி, கோபா டி பிரான்ஸ், உலகக்கோப்பை என அனைத்திலும் அற்புதமாக கோல்களை அடித்து உலக அரங்கை தன்பக்கம் திருப்பியுள்ளார்.
மேலும் எம்பாப்பே சிறு வயது முதலே ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தகு விடயமாகும். எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும் எனவும் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
பிரான்சில் லீக் 1 விருதுகள் வழங்கும் விழாவில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
சர்வதேச கால்பந்து அரங்கில் கிலியான் எம்பாப்வேவின் ரியல் மாட்ரிட் அணி ஒப்பந்தமானது எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த லீக்-1 தொடரோடு PSG அணியிலிருந்து வெளியேற உள்ளதாக எம்பாப்பே அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக புதிய கழகத்துடனான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 வயதான பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்வே PSG (பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன்) அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
PSG அணிக்காக இதுவரை 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளார்.
2022 கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜன்டீனாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்களைப் பதிவு செய்திருந்தார்.
இதனிடையே பிரான்சில் லீக் 1 விருதுகள் வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த வீரர் விருதை எம்பாப்பே பெற்றுள்ளார்.
இதன்போது பேசிய அவர், "எனது அடுத்த கழகம் பற்றி அறிவிக்க இது சரியான நேரம் அல்ல.
எல்லாவற்றிற்கும் ஒரு சரியான நேரம் இருக்கிறது. எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
லீக்-1 சீசனிலிருந்து வெளியேறும்போது நான் சரித்திரம் படைத்திருக்க வேண்டும் என்று எனது அப்பா விரும்பினார்.
இந்த நீண்டநாள் பயணத்தில் அதை நான் நிறைவேற்றி இருக்கிறேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |