பிறந்தநாளில் கோல் அடித்து ரொனால்டோவின் சாதனையைப் படைத்த எம்பாப்பே
லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் வீரர் கிலியன் எம்பாப்பே புதிய சாதனை படைத்தார்.
59 கோல்கள்
செவில்லா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான லா லிகா போட்டி Estadio Bernabeu மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் ஜூட் பெல்லிங்கம் (Jude Bellingham) கோல் அடித்தார்.
அதன் பின்னர் 86வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
பிறந்தநாளில் சாதனை
இது தனது 27வது பிறந்தநாளில் அடித்ததால் சிறப்பு வாய்ந்த கோல் ஆக எம்பாப்பேவுக்கு அமைந்தது.
மேலும், ஒரு காலண்டர் ஆண்டில் அதிகபட்சமான 59 கோல்கள் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) சாதனையை எம்பாப்பே சமன் செய்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |