பிரான்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: பயிற்சிக்கு திரும்பிய எம்பாப்பே
யூரோ கிண்ணம் 2024 தொடரில் இனி விளையாடுவது சந்தேகம் என கூறப்பட்ட நிலையில், பிரான்ஸ் அணித்தலைவர் கைலியன் எம்பாப்பே பயிற்சிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரத்தவெள்ளத்தில் வெளியேறினார்
யூரோ கிண்ணம் 2024 தொடரில் பிரான்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தில் கைலியன் எம்பாப்பே மூக்கில் காயம்பட்டு இரத்தவெள்ளத்தில் வெளியேறினார். இந்த நிலையில், புதன்கிழமை அவர் பயிற்சிக்கு திரும்பியுள்ளது பிரான்ஸ் கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் எம்பாப்பேவின் மூக்கு காயத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், யூரோ கிண்ணம் தொடருக்கு பிறகு அறுவை சிகிச்சை நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
உரிய நேரத்தில் களமிறங்குவார்
புதன்கிழமை பயிற்சிக்கு திரும்பிய எம்பாப்பே தனியாகவே பயிற்சி மேற்கொண்டுள்ளார். இறுதியில் சக வீரர்களுடன் இணைந்துள்ளார். வெள்ளிக்கிழமை நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் எம்பாப்பே களமிறங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் உரிய நேரத்தில் அவர் யூரோ கிண்ணம் தொடரில் களமிறங்குவார் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |