கால்களில் வித்தை காட்டி கோல் அடித்த எம்பாப்பே: ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ
லீக் 1 தொடரின் ஆக்ஸரே அணிக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வீழ்த்தியது.
எம்பாப்பேவின் மிரட்டலான கோல்
பிரான்சின் Stade de I'Abbe-Deschamps மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில், பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி ஆக்ஸரேவை எதிர்கொண்டது.
பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் 6வது நிமிடத்திலேயே PSG அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே மிரட்டலாக கோல் அடித்தார்.
KYLIAN MBAPPÉ OPENED THE SCORING WITH AN ABSOLUTE GOLAZO!!!pic.twitter.com/TjCb2yTb0f
— Football Report (@FootballReprt) May 21, 2023
தன்னிடம் வந்த பந்தை கால்களில் மாயாஜாலம் காட்டி அவர் கோல் ஆக மாற்றினார். அதனைத் தொடர்ந்து 8வது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் கோல் அடித்தார்.
PSG அபார வெற்றி
இதன்மூலம் முதல் பாதியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் 2-0 என முன்னிலை வகித்தது. அதன் பின்னர் நடந்த இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் ஆக்ஸரே அணி வீரர் லஸ்ஸினே கோல் அடித்தார்.
எம்பாப்பே கோல் அடித்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். PSG அணி 36 போட்டிகளில் 27 வெற்றிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
Getty Images
AP
AP