யூரோ கிண்ணம் 2024... இரத்த காயங்களுடன் வெளியேறிய கைலியன் எம்பாப்பே
ஆஸ்திரியாவுக்கு எதிரான பிரான்சின் யூரோ 2024 தொடக்க ஆட்டத்தின் போது மோசமான காயத்தால் கைலியன் எம்பாப்பே வெளியேற்றப்பட்டார்.
ஆஸ்திரியாவை எதிர்கொண்டது
ஜேர்மனியில் களைகட்டத் தொடங்கியுள்ளது யூரோ கிண்ணம் போட்டிகள். நேற்று இங்கிலாந்து அணி தங்களின் தொடக்க ஆட்டத்தில் செர்பியாவை எதிர்கொண்டு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்று பிரான்ஸ் அணி தங்கள் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பிரான்ஸ் அணித் தலைவர் கைலியன் எம்பாப்பே மூக்கு உடைந்து இரத்த காயங்களுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பந்தை தலையால் எட்டித்தள்ள முயன்று, சில நொடிகள் தாமதத்தால் Kevin Danso என்ற வீரரின் தோள்பட்டையில் மோதி காயமடைந்துள்ளார். அடுத்த நொடியே வலியில் துடித்த எம்பாப்பே, மூக்கில் இருந்து இரத்தம் வழிய அவதிப்பட்டார்.
வெள்ளை சட்டை சிவப்பு நிறமாக
உடனடியாக பிரெஞ்சு மருத்துவ ஊழியர்கள் தங்கள் நட்சத்திர வீரரைப் பார்க்க வந்தனர், அவருடைய வெள்ளை சட்டை மூக்கில் இருந்து வழிந்த இரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியிருந்தது.
முதலுதவிக்கு பின்னர் எம்பாப்பே களத்திற்கு திரும்பினாலும், ஆட்டத்தை தாமதப்படுத்துவதாக குறிப்பிட்டு நடுவரால் புகார் தெரிவிக்கப்பட, அவருக்கு பதிலாக Olivier Giroud களமிறங்கினார். இறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தங்களின் வெற்றிக் கணக்கை தொடங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |