ஜாம்பவான் வீரரை இப்படியா அவமரியாதை செய்வது? கொந்தளித்த கைலியன் எம்பாப்பே
பிரான்ஸ் ஜாம்பவான் வீரரை பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு தலைவர் அவமரியாதை செய்ததாக கைலியன் எம்பாப்பே கண்டித்துள்ளார்.
பிரான்ஸ் ஜாம்பவான் வீரர்
பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், பிரான்ஸ் ஜாம்பவான் வீரர் ஜினெட்டின் ஜிடேன் குறித்த கேள்விக்கு அவரை கிண்டல் செய்யும் வகையில் பதில் அளித்தார்.
அதாவது, அணியின் பயிற்சியாளர் டெஸ்ஸாம்ப்ஸின் ஒப்பந்தத்தை 2026ஆம் ஆண்டு வரை நீட்டிக்க FFF (பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு) முடிவு செய்தது.
அதனால் முன்னாள் வீரரான ஜிடேன் பிரேசில் போன்ற அணிக்கு பயிற்சியாளராக வேண்டுமா என்று நோயல் லு கிரேட்டிடம் கேட்கப்பட்டது.
கிண்டல் செய்த தலைவர்
அதற்கு அவர், 'அவர் விரும்பியதை செய்ய முடியும். ஜிடேன் எப்போதும் ஏணிப்படியில் இருந்தார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு நிறைய ஆதரவாளர்கள் இருந்தனர், சிலர் டெஸ்ஸாம்ப்ஸ் வெளியேறுவதற்காக காத்திருந்தனர்.
ஜிடேன் அவர் விரும்பியதை செய்கிறார், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நான் அவரை ஒருபோதும் சந்தித்ததில்லை. அவர் என்னை தொடர்பு கொள்ள நினைத்தால் கண்டிப்பாக முடியாது. நான் அவரது போனை எடுக்கவே மாட்டேன்' என தெரிவித்தார்.
எம்பாப்பே கண்டனம்
நோயல் லு கிரேட்டின் இந்த கருத்துக்களுக்கு நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,
'பிரான்ஸ் என்றால் ஜிடேன் தான், ஒரு ஜாம்பவான் வீரரை இப்படி அவமரியாதை செய்ய நாங்கள் நினைக்க மாட்டோம்' என கூறியுள்ளார்.
@Getty
ஜினெட்டின் ஜிடேன் 506 கிளப் போட்டிகளில் 95 கோல்களும், பிரான்ஸ் அணிக்காக 108 போட்டிகளில் 31 கோல்களும் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.