பேரழிவை சந்தித்த மக்களுக்கு உதவ அனைத்து வழிகளையும் பயன்படுத்தவேன்! எம்பாப்பே செய்த ஆச்சரிய விடயம்
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே களமிறங்கியுள்ளது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தின் கோர தாண்டவம்
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் 45,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உலக நாடுகள் பலவும் அவர்களுக்கு உதவி வருகின்றன.
@IBRAHIM ONER/SOPA IMAGES/LIGHTROCKET VIA GETTY IMAGES
நிதி திரட்டும் முயற்சியில் எம்பாப்பே
இந்த நிலையில், பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே துருக்கி மக்களுக்கு உதவ நிதி திரட்டும் நிவாரண முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், அறிவிக்கப்பட்டாத வீடியோவில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார்.
அந்த வீடியோவில் அவர், 'என்ன நடந்தது என்பது ஒரு பெரிய சோகம். இது எங்கள் கற்பனைக்கு மிகப்பெரிய சோகமாக இருந்திருக்க வேண்டும். துருக்கியர்கள் என்ன செய்தார்கள் என்பதை மதிப்பிடுவது எனக்கு கடினமாக உள்ளது. ஆனால் இன்றைய நமது பணி எனக்கு அசாதாரணமானது. உலக கால்பந்து சமூகம் ஒன்று கூடி துருக்கியை ஆதரிக்கும். இந்த வகையில், இந்த திட்டம் எனக்கு விதிவிலக்கானது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்' என தெரிவித்தார்.
எம்பாப்பே இந்த முயற்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ரசிகர்கள் இந்த செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.