விடைபெறுகிறேன்... பிரான்ஸ் நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே அறிவிப்பு
Paris St-Germain அணியில் இருந்து தொடரின் இறுதியில் தாம் விலக இருப்பதாக பிரான்ஸ் நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே அறிவித்துள்ளார்.
நீடிக்க விரும்பவில்லை
தமது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ள எம்பாப்பே, அதில் தொடர்புடைய தகவலை பதிவு செய்துள்ளார். நேரம் வரும்போது உங்களுடன் பேசுவேன் என்று நான் எப்போதும் கூறி வந்தேன் என குறிப்பிட்டுள்ள எம்பாப்பே,
MERCI. ?? @PSG_inside pic.twitter.com/t0cL2wPpjX
— Kylian Mbappé (@KMbappe) May 10, 2024
PSG அணியில் இது தமது இறுதி ஆண்டு என்றும், இனிமேலும் தாம் நீடிக்க விரும்பவில்லை என்றும், இன்னும் சில வாரங்களில் PSG அணியுடனான தமது பயணம் முடிவுக்கு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் PSG அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அத்துடன் கோடையில் ரியல் மாட்ரிட் அணியில் சேர அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். உலகக் கிண்ணம் வென்றுள்ள கைலியன் எம்பாப்பே PSG அணியில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்களில் ஒருவர்.
ஆண்டுக்கு 259 மில்லியன் பவுண்டுகள்
இதுவரை அவர் 255 கோல்களை PSG அணிக்காக பதிவு செய்துள்ளார். பாரிஸ் நகரில் பிறந்த கைலியன் எம்பாப்பே ஆண்டுக்கு 165.7 மில்லியன் பவுண்டுகள் சம்பளத்துடன் கடந்த 2017ல் PSG அணியில் இணைந்தார்.
சமீபத்தில் Al-Hilal அணி நிர்வாகம் அவருக்கு உலகின் மிக அதிக சம்பளமாக ஆண்டுக்கு 259 மில்லியன் பவுண்டுகள் தொகையை அளிக்க முன்வந்தது. ஆனால் கைலியன் எம்பாப்பே அந்த வாய்ப்பை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |