புதிய வரலாறு படைத்த கைலியன் எம்பாப்பே! கொண்டாடும் PSG அணி
பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே 201வது கோலை அடித்த பிறகு, பாரிஸ் செயின்ட்-ஜேர்மைனின் எல்லா காலத்திலும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன்
நேற்று நடந்த லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் நான்டெஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்தார்.
@AP Photo/Aurelien Morissard
பின்னர் 17வது நிமிடத்தில் எதிரணி வீரர் Jaouen Hadjam மூலம் (சுயகோல்) PSGக்கு ஒரு கோல் கிடைத்தது. எனினும் நான்டெஸ் அணிக்கு 31வது நிமிடம் (லுடோவிக் பிளாஸ்), 38வது நிமிடங்களில் (இக்ஞாடிஸ் கனகோ) இரண்டு கோல்கள் கிடைத்தது.
அதன் பின்னர் PSG அணியின் டேனிலோ 60வது நிமிடத்திலும், எம்பாப்பே 90+2வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். இறுதியில் PSG அணி 4-2 என்ற கோல் கணக்கில் நான்டெஸ் அணியை வீழ்த்தியது.
201 கோல்கள்
எம்பாப்பே கோல் அடித்ததன் மூலம் 24 வயதில் பாரிஸ் செயின்ட்-ஜேர்மைனின் எல்லா காலங்களிலும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அவர் PSGக்கு அணிக்காக அடித்த 201வது கோல் இதுவாகும். அத்துடன் பிரான்சின் எடின்சன் கவனியின் சாதனையை எம்பாப்பே முறியடித்தார்.
இதுகுறித்து பதிவிட்ட PSG அணி, 'கைலியன் எம்பாப்பே பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் ஆனார்' என குறிப்பிட்டுள்ளது.
Kylian Mbappé devient le meilleur buteur de l'histoire du Paris Saint-Germain#?EEP?AKINGHIS?ORY
— Paris Saint-Germain (@PSG_inside) March 4, 2023