MBBS படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு!
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024 கல்வி ஆண்டிற்க்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்க்கான முதல் சுற்று கலந்தாய்வு நடந்தது.
இதில் சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5% உள்ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு 27-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற்றது.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற்றது, இதில் சுமார் 40,200 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில், அரசுக்கான ஒதுக்கீட்டில் 7,612 மாணவர்களுக்கும், தனியார் கல்லூரிகளின் ஒதுக்கீட்டில் 1,475 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ஒதுக்கீடு ஆணைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், ஒதுக்கீட்டு ஆணையை பெற்ற மாணவர்கள் வரும் 11ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்பின் காலியான இடங்கள் குறித்த தகவல்கள் வெளியான பின்னர், 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு , மருத்துவ கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவ மாணவியர்களுக்கான செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |