ஐபிஎல்-லில் முதல் விக்கெட்... பிரபல நடிகரை போல ஸ்டைல் காட்டிய வீரர்! குஷியான ரசிகர்கள்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்திய மெக்காய், பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் போல சைகை செய்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை அந்த அணி பிடித்தது.
நேற்றைய போட்டியில் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் ஓபேட் மெக்காய் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினர். தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் ஷெல்டன் ஜாக்ஸனின் விக்கெட்டை அவர் வீழ்த்தியவுடன், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் செய்வது போன்ற சைகையை செய்து காட்டினார். அதனை ரசித்த ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Winning moment! What a good bowling, Obed McCoy! The way Umesh was hitting, it wasn't easy! His Debut IPL Match & he has done the job!!!! #IPL2022 #KKRvRR pic.twitter.com/pMPpp2oAPV
— Shantanu (@Shantanu630) April 18, 2022
OBED MCCOY, LADIES AND GENTLEMEN! ??? pic.twitter.com/qC831q90e1
— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2022