நினைத்தது போல் நடந்தது, கடவுளுக்கு நன்றி! இந்திய அணியை மொத்தமாக காலி செய்த மேற்கிந்திய வீரர்
இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்து களமிறங்கியதாகவும், அதேபோல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் மெக்காய் தெரிவித்துள்ளார்.
செயின்ட் கிட்ஸில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபேட் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை கதி கலங்க வைத்தார்.
முதல் பந்திலேயே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய அவர், சூர்யகுமார் யாதவ் உட்பட அதிரடி துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக்கையும் ஆட்டமிழக்க செய்தார்.
மொத்தம் 4 ஓவர்களை வீசிய மெக்காய், ஒரு ஓவரை மெய்டனாக்கிய அவர் 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். டி20 கிரிக்கெட்டில் இதுதான் அவரது சிறந்த பந்துவீச்சாகும்.
PC: AFP
மேலும், ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், 'இன்றைய நாள் சிறந்ததாக இருக்கும் என்று கூறி ஆரம்பித்தேன். அதேபோல் நடந்ததைப் பார்த்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்!' என குறிப்பிட்டுள்ளார்.
Started off today claiming that it would be a great one and I’m thankful to God for seeing it through! #WIvIND
— Obed McCoy (@ObedCMcCoy) August 2, 2022