முதல் ஐபிஎல் போட்டியிலே 158 ஓட்டங்கள்! நினைவை பகிர்ந்த நட்சத்திர வீரர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கிய முதல் போட்டியிலேயே 158 ஓட்டங்கள் விளாசிய நினைவை பிரெண்டன் மெக்கல்லம் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதே நாளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதல் போட்டியில் சவுரவ் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராகுல் டிராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 82 ஓட்டங்களில் சுருண்டது.
கொல்கத்தா அணியில் விளையாடிய நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 13 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 158 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார். அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் உறைந்து போயினர். இந்நிலையில் ஐபிஎல் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து முதல் போட்டி அனுபவம் குறித்து மைக்கேல் ஹஸ்ஸி அவரிடம் கேட்டார்.
???'? ?????? ??? ????? ?️
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
As we celebrate 1⃣5⃣ years of IPL, @DavidHussey29 interviews @Bazmccullum, who relives his iconic unbeaten 1⃣5⃣8⃣-run knock in the first-ever IPL game. ? - By @RajalArora
Full interview ? ? #TATAIPLhttps://t.co/1Mi3d760rV pic.twitter.com/Ren9B7qx4k
அப்போது பேசிய மெக்கல்லம், 'உண்மையாகச் சொல்லவேண்டுமானால், எனக்கு அதிக நியாபகம் இல்லை. ஆனால் அந்த இன்னிங்ஸ் முழுவதும் உங்களுடனும், சௌரவ் மற்றும் ரிக்கியுடனும் பேட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு நினைவிருக்கிறது. எட்டு பந்துகளை எதிர்கொண்டபோது எனது ஸ்கோர் பூச்சியத்தில் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது.
‘நிஜமாகவே இங்கு என்னையே ஒரு பெரிய சங்கடமாக்கி விட்டேன்’ என்று நினைத்துக்கொண்டு என் மனம் துடித்தது. பின்னர், அது சிறிய அளவிலான விதி மற்றும் நட்சத்திரங்களுக்காக எழுதப்பட்ட விடயங்கள் என நினைத்தேன். நான் கொஞ்சம் சண்டை போட்டு யோசிக்கிறேன். அங்கும், இங்கும் ஆடுவது எனக்கு அதிர்ஷ்டம். எனக்கு அது நன்றாகவே வந்தது' என தெரிவித்துள்ளார்.