சிக்ஸர் மழை பொழிந்து 95 ரன் விளாசிய வீரர்! தலைநிமிர்ந்த அணி (வீடியோ)
பிக் பாஷ் லீக் தொடரின் அடிலெய்டு அணிக்கு எதிரான போட்டியில் பென் மெக்டெர்மாட் 95 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்
அடிலெய்டில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அடிலெய்டு அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ஹோபர்ட் அணி முதலில் களமிறங்கியது.
ஜுவெல் 5 ரன்னில் டேவிட் பெயின் ஓவரில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஓவெர்ட்டன் பந்துவீச்சில் வ்ரைட் (11), சாம் ஹைன் (0) அடுத்தடுத்து வெளியேறினர்.
அதேபோல் பின்னர் வந்த கோரி ஆண்டர்சன் (3), நிகில் சவுத்திரி (0) ஆகியோர் போய்ஸ் ஓவரில் நடையை கட்டினர்.
Ben McDermott clears the rope on the last ball! 6️⃣
— KFC Big Bash League (@BBL) January 9, 2024
What a knock from the 'Canes opener! #BBL13 pic.twitter.com/BKpIQdd52p
அதிரடி வீரர் டிம் டேவிட்டும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஹோபர்ட் அணி 6 விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் என தடுமாறியது.
ருத்ர தாண்டவம் ஆடிய பென் மெக்டெர்மாட்
அப்போது தொடக்கத்தில் இருந்து தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டிருந்த பென் மெக்டெர்மாட் (Ben McDermott) சரவெடியாய் வெடிக்க தொடங்கினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடிய மெக்டெர்மாட், பவுண்டரிகளையும் விரட்ட தவறவில்லை. அவருக்கு துணையாக கிறிஸ் ஜோர்டனும் தெறிக்கவிட்டார்.
இவர்களின் கூட்டணி மூலம் சரிவில் இருந்த ஹோபர்ட் அணி மீண்டு 165 ஓட்டங்கள் குவித்தது. இறுதிவரை களத்தில் இருந்த பென் மெக்டெர்மாட் 61 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் குவித்தார்.
கிறிஸ் ஜோர்டன் 15 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விளாசினார். அடிலெய்டு தரப்பில் ஓவெர்ட்டன் 3 விக்கெட்டுகளையும், போய்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
McDermott is launchinnngggg them! ? #BBL13 pic.twitter.com/7JnyHDZOmC
— KFC Big Bash League (@BBL) January 9, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |