தனுஷிற்கு நயன்தாரா அறிமுகப்படுத்திய ஜெர்மனி வார்த்தை.., Schadenfreude என்பதன் அர்த்தம் என்ன?
தனுஷிற்கு எதிராக நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் இருக்கும் ‘Schadenfreude’ எனும் வார்த்தை கவனத்தை ஈர்த்துள்ளது.
Schadenfreude அர்த்தம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் திருமண டாக்குமென்ட்ரி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், நானும் ரௌடி தான் படத்தின் திரைப்பட பாடலை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதற்கு, நடிகை நயன்தாரா தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் இறுதி பத்தியில், ‘அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதை உண்மை போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த நேரத்தில், ஜெர்மனி மொழியின் ‘Schadenfreude’ எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என கூறியிருந்தார்.
நயன்தாரா கூறிய Schadenfreude என்னும் வார்த்தை தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. Schadenfreude என்பது ஒரு ஜெர்மனி வார்த்தையாகும்.
இதன் அர்த்தம் என்னவென்றால் அடுத்தவர் துயரத்தை கண்டு ஒருவர் இன்பம் கொள்வது அல்லது திருப்தி அடைவது ஆகும்.
அதுமட்டுமல்லாமல், பிறரின் துயரத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் குணம் என்பது தான் இந்த வார்த்தையின் அர்த்தம் ஆகும். இதனை தான் தனுஷிற்கு எதிராக நயன்தாரா கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |