கருப்பு ஏலக்காயில் ஒளிந்துள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...?
cancer
Cough
dental problem
Indigestion
By Kishanthini
கருப்பு ஏலக்காய் என்பது, பலதரப்பட்ட மக்களாலும் உணவு தயாரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மசாலா பொருளாகும். பல ஆயுர்வேத வைத்தியங்களில் கருப்பு ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு ஏலக்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது. இது, இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
அதுமட்டுமின்றி இது பல நன்மைகளை தரக்கூடியதாக அமைந்துள்ளது.
அந்தவகையில் தற்போது கருப்பு ஏலக்காயில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் கருப்பு ஏலக்காயில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- கருப்பு ஏலக்காயை புலாவ் மற்றும் பிரியாணிகளில் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே பிரியாணியில் கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும்.
- கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு நிவாணம் அளிக்கும்.
- ஏலக்காய் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி வாய் துர்நாற்றத்தை போக்கி வாய்க்கு புத்துணர்ச்சி தருகிறது. ஏலக்காயை கசாயம் போல செய்து குடித்து வந்தால் ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
- அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். மார்பு சளியால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- ஏலக்காயை தேநீர் அல்லது பாயாசத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். ஏலக்காய் இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. நமது உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்க செய்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், நமது உடலில் இரத்தம் இரத்தம் சீராக ஓட உதவி செய்கிறது. உணவில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளும் போது உடலில் உள்ள கேன்சர் கிருமிகளை அழிக்கிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US