குளியல் அறையில் கேட்ட அலறல் சத்தம்! விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சோகம்
இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் அதே ஊரில் கேபிள் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு 22 வயதில் நிவேதா என்ற மகளும் 17 வயதில் சபரி என்ற மகனும் உள்ளனர்.
நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு அளிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா குளியல் அறைக்கு சென்று கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அப்போது நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த நிவேதாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து நிவேதாவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த மாணவி செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.