கனடாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு வரி!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்கப்படும் என கனடா கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா இன்று வரை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
பலவித உருமாற்றங்கள் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய மக்களின் வாழ்வை மீண்டும் முடக்கிப்போட்டுள்ளது கொரோனா.
இந்நிலையில் மக்களை பாதுகாக்க ஒவ்வொரு நாடும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
பல நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது, இந்நிலையில் கனடா கியூபெக் மாகாண அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மருத்துவ வரி விதிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை பிறப்பித்துள்ளது.
மேலும் இதற்கு இன்னும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.