காசாவிலிருந்து தப்பி வந்த மருத்துவத்துறை பணியாளரிடம் கனடா அதிகாரிகள் கேட்ட கேள்வியால் சர்ச்சை
காசாவிலிருந்து தப்பி வந்த மருத்துவத்துறை பணியாளரிடம் கனடா அதிகாரிகள் கேட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
காசாவிலிருந்து தப்பி வந்த மருத்துவத்துறை பணியாளர்
காசாவிலிருந்து தப்பி வந்த மருத்துவத்துறை பணியாளர் ஒருவருக்கு கனேடிய புலம்பெயர்தல் அலுவலர் ஒருவர் அனுப்பிய கடிதம் ஒன்றில், நீங்கள் எப்போதாவது ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாருக்காவது சிகிச்சை அளித்தீர்களா என்றும், உங்கள் பதில், இல்லை என்பதாக அமைந்தால், பின்விளைவுகள் எதையும் சந்திக்காமல், உங்களால் எப்படி அவருக்கு சிகிச்சை மறுக்க முடிந்தது என்பதைக் கூறவும் என கேட்கப்பட்டுள்ளது.
Mahmoud Issa/Reuters
அவர் அந்த கடிதத்தை கெல்லி (Kelly O'Connor) என்னும் புலம்பெயர்தல் சட்டத்தரணியிடம் காட்ட, அந்தக் கடிதத்தைக் கண்டு தான் அதிர்ந்துபோனதாக தெரிவிக்கிறார் கெல்லி.
காரணம், போர் நடக்கும் இடத்தில், காயம்பட்ட ஒருவருக்கு மருத்துவப் பணியாளர் ஒருவர் சிகிச்சையளிக்க மறுப்பது, ஜெனீவா ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்கிறார் கெல்லி. அரசின் இந்த செயல் மிகவும் மோசமான செயலாகும் என்று கூறும் கெல்லி, ஏற்கனவே விசாவுக்கு விண்ணப்பிப்போரிடம் மிகவும் அந்தரங்கமான கேள்விகள் கேட்கப்படுகின்றன, இந்தக் கடிதமோ அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார்.
இந்த விடயம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து விளக்கமளிக்க புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லரைக் கேட்கலாம் என்றால், அவரை சந்திக்க முடியாது என பெடால் புலம்பெயர்தல் துறை கூறிவிட்டிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |