மருத்துவகுணங்கள் நிறைந்த துளசி சாதம்..ரெசிபி இதோ!
துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாகவும் மட்டுமின்றி துளசி சாதம் போன்ற உணவாகவும் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருள்
- துளசி இலை-1/2 கப்
- சாதம்-1 கப்
- கடலை பருப்பு-1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்
- கடுகு- சிறிதளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- எண்ணெய்-1 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- பச்சை மிளகாய்-2
- வெங்காயம்-1
செய்முறை
துளசி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு வதக்கவும்.
khin's kitchen
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு சிறிது வதங்கியதும் துளசி இலை, தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
பின்னர் சாதத்தை போட்டு சிறிது நேரம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். இந்த சாதம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |