முற்றிலுமாக மூட்டு வலியை சரி செய்ய வேண்டுமா? இதோ இயற்கை மருத்துவம்
பொதுவாக மூட்டு வலி என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலரை பாதிக்கிறது. மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்களை நாம் நமது தினசரி வாழ்க்கையில் கண்டிருப்போம்.
குறிப்பாக இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் வருகிறது.
எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு மருந்தாக அமைகின்றன.
அந்தவகையில் மூட்டுவலியை போக்கும் அற்புத இயற்கை மருந்துவம் ஒன்றை தற்போது இங்கு பார்ப்போம்.
தேவையான பொருள்
- முடக்கத்தான் கீரை -ஒரு கைப்புடி அளவு
- நெய் - சிறிதளவு
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு முடக்கத்தான் இலையை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு இந்த இலையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு வசக்க வேண்டும்.
மேலும் இதனுடன் சிறிதளவு நெய் சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர மூட்டு வலி முற்றிலுமாக குறையும்.