இன்னும் 14 நாட்களில்.. மீளா துயரத்தில் மீனா! கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் மீனா.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளில் அசத்தி வந்த மீனா, 2வது என்ட்ரியில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.
இவருக்கும், வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு, திருமணம் நடந்து முடிந்தது, இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், மீனா, கணவர் வித்யாசாகர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொற்றில் இருந்து அனைவரும் மீண்டு வந்தாலும், கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததால் பாதிப்பு தீவிரமாகியுள்ளது.
அதாவது, புறாவின் எச்சம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் உடலில் பரவும் ஒரு வித கிருமி பாதிப்பு காரணமாக நுரையீரல் பிரச்சனை உருவாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்ட வித்யாசாகர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (28.06.2022) உயிரிழந்தார்.
இவரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும் திரையுலகைச் சார்ந்த பலரையும் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இன்னும் 14 நாட்களில், தங்களின் 13 வது ஆண்டு திருமண நாளை மீனா மற்றும் வித்யாசாகர் ஆகியோர் கொண்டாட இருந்த நிலையில், கணவர் வித்யாசாகர் மரணமடைந்த சம்பவம், பலரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.