கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள்
கணவர் மறைவிற்கு பின்னர் தற்போது முதல் முறையாக தன்னுடைய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்து நடிகை மீனா புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு, வித்யாசாகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட நிலையில் தம்பதிக்கு நைனிகா என்கிற மகளும் உள்ளார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, நுரையீரல் பிரச்சினை காரணமாக வித்யாசாகர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி உயிரிழந்தார்.
???@Rambha_indran @sangithakrish pic.twitter.com/xlV5YcGhSA
— Meena Sagar (@Actressmeena16) August 8, 2022
இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. வித்யாசாகர் உயிர் இழந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், மெல்ல மெல்ல கணவர் இழப்பில் இருந்து மீனா மீண்டு வருகிறார்.
இந்நிலையில் அவரது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகியோரை மீனா சந்தித்துள்ளனர்.
ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து மீனாவை சந்தித்த புகைப்படங்களை அவரே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.