நீண்டநாள் காதலரை கரம்பிடித்த தமிழ்ப்பட நடிகை! கோலாகலமாக நடந்த திருமணம்
நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது நீண்ட நாள் காதலரான ரக்ஷித் கெஜ்ரிவாலை கரம் பிடித்தார்.
மீரா சோப்ரா
தமிழில் 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிலா. அதன் பின்னர் ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மீரா சோப்ரா எனும் இயற்பெயர் கொண்ட இவர் தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.
தற்போது 40 வயதாகும் மீரா சோப்ராவுக்கும், தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவால் என்பவருக்கும் ஜெய்ப்பூரில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணம்
மூன்று ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த இவர்கள் இருவரும், ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சொகுசு ஹொட்டலில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இந்த திருமணத்தில் மீரா சோப்ராவின் உறவு சகோதரிகளான பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |