தனிப்பட்ட சமூகம் குறித்து அவதூறு பேச்சு! வசமாக சிக்கிய மாடல் அழகி மீரா மிதுன்..
நடிகை மீரா மிதுன் தலித் சமூகத்தை பற்றி தரக்குறைவாக பேசியதால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீரா மிதுன். இவர் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்று முதல் இன்று வரை சர்ச்சை நடிகையாக விளங்கி வருகிறார்.
இணையத்தில் சூர்யா, நயன்தாரா, திரிஷா போன்றவர்களை வம்புக்கு இழுப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தலித் சமூகத்தை குறித்து தனது காதலனுடன் சேர்ந்து அவதூறாக பேசியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டரீதியான நடவடிக்கை தேவை..@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @thirumaofficial @WriterRavikumar @tnpoliceoffl pic.twitter.com/akusWxoX1G
— Ilayabarathi Ambedkar (@IlayabarathiAm1) August 6, 2021
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகைகள் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை சினிமாவை விட்டு துரத்த வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.
இதுபோல சாதி வன்மையுடன் இணையத்தில் பேசி வரும் மீரா மிதுனை கைது செய்யக்கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.