பிரபல நடிகை மீரா மிதுன் கைது! கைதாவதற்கு முன்பு கதறி அழுது வெளியிட்ட வீடியோ
குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன். இவர் மோசடி செய்து பட்டம் வென்றதாக தேர்வு குழுவிற்கு தெரியவர அவருக்கு கொடுத்த பட்டம் பறிக்கப்பட்டது .
தமிழில் சில படங்களில் நடித்த மீராமிதுனுக்கு பின்னர் படவாய்பே இல்லாத நிலையில் பின்னால் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று காட்டிக்கொள்ள பணம் கொடுத்து எடுத்த விபரீத முயற்சிகள் தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் மீராமிதுன் தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக தாக்கி பேசிய வீடியோ வெளியாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது ஆண் நம்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறுப்பிட்ட சமூத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் சாடியிருந்தார்.
மீராமிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் பொலிசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் மீராமிதுனை பொலிசார் கேரளாவில் வைத்து தற்போது கைது செய்துள்ளனர், அவர் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன்பு நடிகை மீராமிதுன் வெளியிட்ட வீடியோ
— Don Updates (@Don_Updatez) August 14, 2021
⚠️? pic.twitter.com/DnxuihZnQ0