சொந்தமாக செல்போன் கூட இல்லை! ஆனால் 750 மில்லியன் டொலரை வாரி வழங்கிய இந்திய தொழிலதிபர்
சொந்தமாக செல்போன் கூட கிடையாது, ஆனால் சுமார் 750 மில்லியன் டொலர் நிறுவனத்தை தூக்கி கொடுத்த இந்திய தொழிலதிபர் ஆர். தியாகராஜன் குறித்து பார்ப்போம்.
ஸ்ரீராம் குழும நிறுவனர் ஆர். தியாகராஜன்
சென்னையில் 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனமான ஶ்ரீராம் குழுமம் தற்போது பல மில்லியன் டாலர்கள் சொத்துடன் செழித்து வளர்ந்துள்ளது.
இந்தியாவின் ஏழை மக்களுக்கு டிரக்குகள், டிராக்டர்கள் மற்றும் பிற தொழில்கள் தொடங்க கடன் வழங்குவதில் முன்னோடி நிறுவனமான இந்த ஶ்ரீராம் குழுமத்தை ஆர். தியாகராஜன் நிறுவினார்.
இன்சூரன்ஸ் மற்றும் பங்கு தரகு என இவரது இந்த கூட்டு நிறுவனத்தில் தற்போது 108,000 பேர் பணி புரிகின்றனர்.
குறிப்பிட்ட வருமானம் கொண்ட நபர்களுக்கு மட்டும் வங்கிகள் கடன் வழங்கி வந்த நிலையில், அதில் பெரும் புரட்சியை செய்து குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கும் கடன் வழங்கி சாதித்து காட்டினார்.
ஶ்ரீராம் குழுமத்தின் தற்போதைய மொத்த பங்குகளின் விலை சுமார் $750 மில்லியனுக்கும் அதிகமாகும். கடந்த ஆண்டு மட்டும் இதன் முதன்மை நிறுவன பங்குகள் 35% உயர்ந்து ஜூலையில் சாதனை படைத்துள்ளது.
இப்படி இருக்கையில் இதன் நிறுவனர் ஆர். தியாகராஜன்(R Thyagarajan) தனக்கென்று சிறிய வீடு மற்றும் $5,000 மதிப்புள்ள காரில் தன்னை திருப்தி படுத்தி கொண்டு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களையும் (அதாவது 750 மில்லியன் டொலர் நிறுவனத்தை) சில குறிப்பிட்ட தனது ஊழியர்களுக்கு வழங்கி விட்டு வெளியேறியுள்ளார்.
மேலும் ஶ்ரீராம் நிறுவனத்தை அறக்கட்டளையாக 2006ல் மாற்றினார், அதன் 44 குழு நிர்வாகிகள் தற்போது பயனாளிகளாக உள்ளனர்.
செல்போன் கூட சொந்தமாக கிடையாது
இந்நிலையில் சமீபத்தில் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் 86 வயதான ஶ்ரீராம் குழுமத்தை(Shriram Group) நிறுவிய ஆர். தியாகராஜன் அரிய நேர்காணலில், தன்னிடம் மொபைல் போன் கூட இல்லை என்றும் அதனை கவனச்சிதறலாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடன் வரலாறுகள் அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கடன் வழங்குவது என்பது சிந்திக்கப்படுவது போல் ஆபத்தானது அல்ல என்பதை நிரூபிப்பதற்காக தான் இந்த தொழில் துறையில் நுழைந்ததாகக் தெரிவித்தார்.
அதனால் தான் தன்னுடைய சொத்துகளை(பங்குகளை) வழங்குவது தொடர்பான முடிவில் எந்தவொரு அசாதாரணமும் எனக்கு தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் நான் கொஞ்சம் இடதுசாரி என்றும், எனவே “நல்லமுறையில் வாழ்க்கையை வாழும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் நான் ஒருபோதும் ஆர்வமாக இருந்ததில்லை.
ஆனால் அதே சமயம், பொருளாதாரத்தில் தவிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருந்து சில விரும்பத்தகாத தன்மைகளை அகற்ற விரும்பி தன்னுடைய 37வது வயதில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் ஸ்ரீராம் சிட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |