உலகின் சிறிய 4 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்? விலை எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்
தற்போது இருக்கும் ஸ்மார்ட் போன் உலகில் பல்வேறுவிதமான சிறப்பம்சங்களை போன் நிறுவனங்கள் கொண்டு வருகின்றன.
ஏனெனில் இப்போது இருக்கும் வணிக போட்டியில், மக்களை கவரும் வகையில் ஏதேனும் சிறப்பம்சங்களைக் கொடுத்தால், மக்கள் அதை விரும்பியும் வாங்குவார், சில காலம் அதன் பெயரும் நிலைத்து நிற்கும்.
அந்த வகையில் மிகச் சிறிய ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காகவே Mony Mist என்ற 4 ஜி ஸ்மார்ட் போன் வந்துள்ளதாம். இது பார்க்க அப்படியே ஐபோன் 4 போன்று அழகாக சிறியதாக உள்ளதாம்.
எளிதில் உள்ளங் கை அளவில் அடங்கும் இந்த போன், முழுமையாக செய்ல்படும் ஒரு 4 ஜி ஸ்மார்ட் போன் ஆகும். இது Android Pie உடன் அறிமுகமாகுகிறது. இந்த போன் இன்னும் விற்பனைக்கு வரவில்லை,
அதே சமயம் இந்த போன், crowdfunding-ல் 99 டொலருக்கு விற்கப்படுகிறதாம். இது இறுதியில் சில்லறை விலைக்கு வரும் போது 150 டொலருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mony Mist போனின் சிறப்பம்சங்கள்
கருப்பு நிறத்தில் வரும் இந்த போன், 89.5 x 45.5 x 11.5 மிமீற்றர் அளவு கொண்டுள்ளது. போன் அப்படியே ஐபோன் 4 போன்றே உள்ளது. இதன் எடை மிகவும் குறைவு என்பதால், இதை நாம் உள்ளங்கைக்குள் வைத்து கொண்டு செல்லமாம் மற்றும் நாம் பாக்கெட் பையில் வைத்தால், இது இருக்கும் இடம் தெரியாது, அந்தளவிற்கு எடை குறைவாக உள்ளது.
ஆனால், தெளிவான எடை விவரம் தெரியவில்லை. இது கொஞ்சம் சிறிய திரையைக் கொண்டிருப்பதால், சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது, அதில் இருப்பவற்றை படிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும், அது பழகினால் சரியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
Mony Mist போனின் விவரங்கள்
இந்த போன் 3 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே 480x854 பிக்சல் தீர்மானம் மற்றும் 16: 9 விகித விகிதத்தைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் மீடியாடெக் எம்டி 6735 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் எதுவும் இல்லை. இது ஆண்ட்ராய்டு 9 வெர்ஷனில் வருகிறது.
கேமராவைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் கொண்ட சென்சார் கமெரா உள்ளது. இதில் 480p வேகத்திறன் கொண்ட வீடியோக்களைப் பிடிக்க முடியும். முன் கேமராவிலும் 4080p வீடியோக்களைப் பிடிக்க முடியும்.