முகேஷ் அம்பானி வீட்டில் இன்னொரு ஆனந்த்... அவரது சொகுசு வாழ்க்கையும் சொத்து மதிப்பும்

Mukesh Dhirubhai Ambani Money
By Arbin Jul 18, 2024 11:27 PM GMT
Report

முகேஷ் அம்பானியின் இளைய மகன் மட்டுமல்ல ஒரே ஒரு மருமகனின் பெயரும் ஆனந்த் தான். பிரமல் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக செயல்படுபவர் தான் ஆனந்த் பிரமல்.

உண்மையான சொத்து மதிப்பு

இவர் தான் முகேஷ் அம்பானியின் ஒரே ஒரு மகளை திருமணம் செய்துகொண்டவர். அஜய் பிரமலின் மகனும் பிரமல் சாம்ராஜியத்தின் வாரிசுமான ஆனந்த் பிரமல் ஊடக வெளிச்சத்தில் அதிகமாக முகம் காட்ட மறுப்பவர்.

முகேஷ் அம்பானி வீட்டில் இன்னொரு ஆனந்த்... அவரது சொகுசு வாழ்க்கையும் சொத்து மதிப்பும் | Meet Mukesh Ambani Son In Law Anand Piramal

பிரமல் குழுமமானது குடியிருப்பு, கட்டுமானம், நிதி என பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது. ஆனந்த் பிரமலின் உண்மையான சொத்து மதிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், அவரது தந்தையின் சொத்து மதிப்பு ரூ 25,596 கோடி என்றே கூறப்படுகிறது.

1985 அக்டோபர் மாதம் பிறந்த ஆனந்த் பிரமல், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பிரமல் குழுமத்தில் கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆனந்த், மும்பை பெருநகரத்தின் மஹாலக்ஷ்மி, பைகுல்லா, தானே, முலுண்ட், குர்லா, லோயர் பரேல் மற்றும் வோர்லி பகுதிகளில் புதிய கட்டுமானங்களை உருவாக்கினார்.

முகேஷ் அம்பானி வீட்டில் இன்னொரு ஆனந்த்... அவரது சொகுசு வாழ்க்கையும் சொத்து மதிப்பும் | Meet Mukesh Ambani Son In Law Anand Piramal

மட்டுமின்றி, கிராமப்புற மக்களுக்கான eSwasthya என்ற சுகாதார நிறுவனம் ஒன்றையும் துவங்கினார். 2018ல் முகேஷ் அம்பானியின் ஒரே ஒரு மகளான இஷாவுக்கும் ஆனந்துக்கும் மிக ஆடம்பரமாக திருமணம் நடந்தது.

ஆடம்பர மாளிகையான Gulita

இஷா அம்பானியை திருமணம் செய்த பின்னர், பிரமல் குடும்பத்தினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆடம்பர மாளிகையான Gulita-வில் குடியேறினார். 5 மாடிகள் கொண்ட இந்த மாளிகையின் மதிப்பு ரூ 452 கோடி.

வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டும் மூன்று மாடி அடித்தள பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 12 படுக்கையறை கொண்ட சொகுசு மாளிகை ஒன்றும் இஷா - ஆனந்த் தம்பதிக்கு சொந்தமாக உள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டில் இன்னொரு ஆனந்த்... அவரது சொகுசு வாழ்க்கையும் சொத்து மதிப்பும் | Meet Mukesh Ambani Son In Law Anand Piramal

இது ரூ 500 கோடிக்கு பிரபல அமெரிக்க பாடகி ஜெனிபர் லோபஸுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனந்த் சொந்தமாக சொகுசு கார்கள் பல வைத்திருக்கிறார்.

Range Rover Sports, Mercedes Maybach 3600, Jaguar F-Pace, Mercedes Benz S350D, Aston Martin Rapide, Lamborghini Gallardo என நீளும் பட்டியல். ஆனந்த் - இஷா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். ஆனந்தின் சகோதரி நந்தினி பிரமல் குழும நிறுவனங்களில் நிர்வாக பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US