கனேடிய வெளியுறவு அமைச்சருடன் இந்திய அமைச்சர் வெளிநாடொன்றில் ரகசிய சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சரும், ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரகசிய சந்திப்பு
சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான மெலனி ஜோலியும் (Melanie Joly) ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Financial Times என்னும் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த சந்திப்பு ரகசியமாக நடைபெற்றதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ள நிலையில், கனேடிய வெளியுறவு அமைச்சகம் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
Twitter
கெடு முடிந்தும் இந்தியாவிலேயே இருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகள்
இதற்கிடையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இன்னமும் கனேடிய தூதரக அதிகாரிகள் சிலர் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்று Financial Times தெரிவித்துள்ளது.
கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை இந்தியாவிலிருந்து திருப்பி அழைத்துக்கொள்ள, இந்தியா கனடாவுக்கு விதித்திருந்த கெடு, இம்மாதம், அதாவது, அக்டோபர் 10ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |