பிரான்ஸ் ஜனாதிபதியை முதன்முறை சந்தித்த ரிஷி சுனக்கின் அறிக்கை
பிரித்தானிய பிரதமரானபின் முதன்முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் ரிஷி சுனக்.
இருவரும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது முதல் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்துள்ளார்கள்.
2022 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலர் எகிப்தில் கூடியுள்ள நிலையில், பிரித்தானிய பிரதமரானபின் முதன்முறையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்துள்ளார் ரிஷி சுனக்.
இரு நாடுகளின் தலைவர்களும், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது முதல் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்துள்ளார்கள்.
மேக்ரானை சந்தித்தபின் அது குறித்து விவரித்த ரிஷி சுனக், ஜனாதிபதி மேக்ரான் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது முதல் பிரான்சுடன் இணைந்து செயலாற்றவேண்டிய பல விடயங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம் என்றார்.
அதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரான்சுடனான ஒப்பந்தம் ஒன்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.