பிரிந்து வாழும் ஹரியும் மேகனும்? அடுக்கடுக்காய் ஆதாரங்கள்
தொடர்ச்சியாக இளவரசர் ஹரி தனியாகவே பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருவதால், ஹரியும் மேகனும் பிரிந்து வாழ்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஹரி
சமீப காலமாக, பல பொது நிகழ்ச்சிகளில் மேகன் இல்லாமல் ஹரி தனியாகவே பங்கேற்று வருகிறார்.
நியூயார்க், லண்டன் மற்றும் Lesotho என்னும் ஆப்பிரிக்க நாடு ஆகிய இடங்களில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் ஹரி பங்கேற்றபோது, அவரது மனைவி மேகன் அவருடன் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
அதேபோல, மேகனும் தனியாகவே சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார்.
மேலும், ஹரியும் மேகனும் இணைந்து சில நிறுவனங்களை நடத்திவந்த நிலையில், இனி இருவரும் தனித்தனியாக தங்கள் நிறுவனங்களை நடத்த இருக்கிறார்கள்.
காரணம் என்ன?
அதாவது, ஹரிக்கும் மேகனுக்கும் சில முக்கிய விடயங்களில் கருத்துவேறுபாடு நிலவுகிறது.
ஹரி நீதிமன்றம் வழக்கு என அலைவது மேகனுக்கு பிடிக்கவில்லையாம். அத்துடன், ஹரி தன் பிள்ளைகள் சாதாரண மக்களைப்போல வாழவேண்டும் என விரும்புவதாகவும், பிரபலங்களைப்போல அவர்கள் பொது இடங்களில் புகைப்படங்கள் எடுக்கப்படுவதை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால், ஆடம்பர விரும்பியான மேகனோ, பிள்ளைகளை பல பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் வீட்டை விட்டு தூரமான ஒரு இடத்தில் வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார் மேகன். ஹரியோ வீட்டுக்குப் போய் சில வாரங்களாகிவிட்டன.
சொல்லப்போனால், தன் பிறந்தநாள் அன்றே, மேகன் இல்லாமல் தனியாக தன் நண்பர்களுடன் ஹரி சுற்றுலா சென்றதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், மேகனுடன் ஹரி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், மேகன் முந்திக்கொண்டு பேசுவதும், ஹரிக்கு முக்கியத்துவம் கொடுக்காததும் அவரை வருத்தமுறச் செய்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இப்போது மேகன் இல்லாமல் ஹரி பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில், அவர் நீண்ட காலத்துக்குப் பிறகு மனம் விட்டு சிரித்ததாகவும், தன் நண்பர்களை தொடர்புகொள்ள முயற்சிப்பதாகவும் கூட செய்திகள் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |