ஆறுகளாக மாறிய தெருக்கள்... தண்ணீர் புகுந்த ஆயிரக்கணக்கான வீடுகள்: தத்தளிக்கும் ஒரு மாகாணம்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகணத்தில் பெய்த பேய் மழையால் தெருக்கள் ஆறுகளாக மாறியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
அவசர உதவிகளுக்கு
மத்திய வடக்கு கடற்கரைப் பகுதியில் பேரழிவு தரும் வெள்ளம் ஆபத்தானதாக மாறியுள்ளது. இதுவரை மூவர் மாயமாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அவசர உதவிகளுக்கும் தொடர்பு கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 50,000 மக்கள் வரையில் பேய் மழைக்கு பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வியாழக்கிழமை முழுவதும் நீடித்த கனமழை தொடரும், கெம்ப்சி மற்றும் காஃப்ஸ் ஹார்பர் உள்ளிட்ட சமூகங்கள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து அதிக எச்சரிக்கையில் உள்ளன.
அடுத்த 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் என்றும் இப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படும்
கடந்த 48 மணி நேரமாக ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும் உள்ளூர் மக்களும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதை நியூ சவுத் வேல்ஸ் மாகண முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 130க்கும் மேற்பட்ட மழை எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பாதையில் உள்ள உள்ளூர்வாசிகள் உயரமான பகுதிக்குச் சென்று முடிந்தால் வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |