ஜேர்மனியில் மெகா வேலைநிறுத்தம்... எப்போது, யார் வேலைநிறுத்தம் செய்வது?: சில முக்கிய தகவல்கள்
பொதுவாக ஜேர்மனியில் வேலைநிறுத்தம் அபூர்வமாகவே நடைபெறும் நிலையில், வேலைநிறுத்தம் காரணமாக அடுத்த வார துவக்கத்தில் பெருமளவில் பயணக்குழப்பங்கள் ஏற்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு பெரிய யூனியன்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு
ஜேர்மனியின் இரண்டு பெரிய தொழிலாளர் யூனியன்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் பெருமளவில் பயணக்குழப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வேலைநிறுத்தம் நடைபெறுமானால், அது 30 ஆண்டுகளில் முதன்முறையாக நடைபெறும் வேலைநிறுத்தமாக இருக்கும்.
euronews
எப்போது, யார் வேலைநிறுத்தம் செய்வது?
திங்கட்கிழமை அதிகாலை துவங்கும் வேலைநிறுத்தம், அன்று முழுவதும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், சில விமான நிலையங்கள் ஞாயிறுமுதலே, வரும் மற்றும் புறப்படும் விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஆக, ஞாயிறு துவங்கும் வேலைநிறுத்தம், செவ்வாய் வரை கூட நீடிக்கலாம் என கருதப்படுகிறது.
வேலைநிறுத்தத்தால் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவை என அனைத்து வகை போக்குவரத்துமே பாதிக்கப்படலாம் என்பதால் நாடு முழுவதும் பெரும் குழப்பம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.