மேகன் எங்களை ஏமாற்றிவிட்டார்... கோபத்தில் ரசிகர்கள்: பின்னணி
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இளவரசர் ஹரியுடன் அவரது மனைவி மேகனும் பங்குகொள்ளாததால், அவரது ரசிகர்கள் கோபமடைந்துள்ளார்கள்.
இளவரசர் ஹரி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்தும், Global Citizen என்ற அமைப்பு நடத்தும் Vax Live என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்து ஹரியை வரவேற்றார்கள். ஆனால், இன்னொரு பக்கம் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனைக் காண்பதற்காக அவரது ரசிகர்கள் ஏராளம்பேர் அங்கு கூடியிருந்துள்ளார்கள்.
ஆனால், மேகன் நிகழ்ச்சிக்குவராததால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
மேகன் கர்ப்பிணியாக இருப்பதால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இளவரசர் ஹரியின் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கே அவர் செல்லவில்லை.
மேகன் பயணம் செய்யக்கூடாது என மருத்துவர் உறுதியாக கூறிவிட்டதாலேயே, சமீப காலமாக அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது.