ராஜ குடும்பத்துடன் நெருக்கம் காட்ட இளவரசர் ஹரியைக் கட்டாயப்படுத்தும் மேகன்: சுயநலமா?
சுயநலக் காரணங்களுக்காக, ராஜ குடும்பத்துடன் நெருக்கம் காட்ட இளவரசர் ஹரியை மேகன் கட்டாயப்படுத்துவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுயநலக் காரணங்களுக்காக...
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய நிலையிலும், எதிர்காலத்தில் தனக்கு ஒரு சிறிய பொறுப்பாவது வழங்கப்படலாம் என ஹரி நம்பிக்கொண்டிருப்பதாக ராஜ குடும்ப நிபுணரான டாம் க்வின் தெரிவித்துள்ளார்.
ஆகவே, தங்கள் சுயநலனுக்காக, ராஜ குடும்பத்துடன் நெருக்கம் காட்டுமாறு இளவரசர் ஹரிக்கு அவரது மனைவியான மேகன் அழுத்தம் கொடுத்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் நடந்த ஒரு விடயம்
1936ஆம் ஆண்டு, பிரித்தானிய மன்னராக இருந்த எட்டாம் எட்வர்ட் என்பவர், வாலிஸ் சிம்ஸன் என்னும் விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால், அவர் தனது மன்னர் பதவியை துறக்க நேர்ந்தது.
என்றாலும், பின்னாட்களில் எட்வர்டுக்கு சில முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே, அவரைப்போலவே, விவாகரத்தான அமெரிக்கப்பெண்ணான மேகனை ஹரி திருமணம் செய்திருந்தாலும், ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறினாலும், எட்வர்டைப்போல தனக்கும் ராஜ குடும்பத்தில் ஏதாவது ஒரு சிறு பொறுப்பு வழங்கப்படும் என ஹரி நம்புகிறார்.
அதற்கேற்ப, ராஜ குடும்பத்துடன் ஹரி நெருக்கமாக இருந்தால், அதனால் தங்களுக்கு லாபம் என கருதும் மேகன், ராஜ குடும்பத்துடன் நெருக்கம் காட்டுமாறு ஹரிக்கு அழுத்தம் கொடுத்துவருவதாக டாம் க்வின் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |