இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட நிலை மேகனுக்கும்... காரணம் இதுதான்: முதன் முறையாக மனம் திறந்த இளவரசர் ஹரி
இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் மேகன் மெர்க்கலுக்கும் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தாலையே தாம் இந்த முடிவுக்கு வந்ததாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு ஒருபோதும் திரும்பிவிடக் கூடாது என்பதாலையே, அந்த அச்சம் காரணமாகவே தமது குடும்பம் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
ஓப்ரா வின்ஃப்ரே முன்னெடுத்த நேர்காணலில், அதிர்வலைகளை ஏற்படுத்தும் சில உண்மைகளை இளவரசர் ஹரி உடைத்துப் பேசியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியது உண்மையில் கடுமையான முடிவு என்றாலும், குறைந்தபட்சம் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் இளவசர் ஹரி.
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனுடன் முதன் முறையாக ஓப்ரா வின்ஃப்ரே முக்கிய நேர்காணல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மிக விரைவில் வெளியாகவிருக்கும் அந்த நேர்காணலின் சில பகுதிகள் முன்னோட்டம் விடப்பட்டுள்ளது.
அதிலேயே, தமது தாயாருக்கு ஏற்பட்ட மோசமான அதே அனுபவம் தமது மனைவிக்கும் ஏற்படுவிடும் என தாம் அஞ்சையதாக இளவரசர் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
