'இந்த விடயம் யாருக்கும் தெரியாது' திருமணம் குறித்த இரகசியத்தை போட்டுடைத்த மேகன் மார்கல்
பிரித்தானிய அரச இளவரசர் ஹாரி மற்றும் அவரது அமெரிக்க மனைவி மேகன் ஆகியோர் அதிகாரப்பூர்வ திருமண விழாவிற்கு 3 நாட்களுக்கு முன்னர் இரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
இதனை, மேகன் மார்கல் அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான Oprah Winfrey உடனான நேர்காணலில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர்கள், அதிகாரப்பூர்வமாக மே 19, 2018 அன்று பிரித்தானியாவின் Windsor கோட்டையில் தொலைக்காட்சி நேரலையில் Canterbury Justin Welsby பேராயர் முன்னிலையில் முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால், இந்த விடயம் யாருக்கும் தெரியாது என்றும், அவர்கள் முன்னதாகவே பேராயரை அழைத்து தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட பிரத்யேக தருணம் இருக்க வேண்டும் என விருப்படுவதாக கூறி, மூன்று நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்ததாக அவர் கூறினார்.
"பேராயர் முன்னிலையில் நாங்கள் இருவர் மட்டும் எங்கள் விட்டு முற்றத்தில் நின்று எங்களது திருமணத்தை நடத்திக்கொண்டோம்" என அவர் கூறினார்.