மொத்தமாக உடைத்துப் பேசவிருக்கும் மேகன் மெர்க்கல்: அச்சத்தில் இளவரசர் வில்லியம் மனைவி கேட்
இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டன் உடனான தமது மனக்கசப்பு தொடர்பில் மேகன் மெர்க்கல் மொத்தமாக அம்பலப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக பிரித்தானிய அரண்மனை ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு மேகன் மெர்க்கல் மொத்தமாக மனம் திறந்து அம்பலப்படுத்தினால், அது சகோதரர்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹரியின் பிரிவுக்கு காரணமாகவும் அமையலாம் என அஞ்சப்படுகிறது.
இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொள்வதில் இளவரசர் வில்லியத்திற்கு விருப்பம் இல்லை என்றே கூறப்பட்டது.
மட்டுமின்றி, ஹரியின் கல்லூரி நண்பர்கள் மூலம் மேகன் உடனான உறவை முடித்துக் கொள்ள வில்லியம் முயன்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மேகன் உடனான திருமணம் குறித்து சகோதரர்கள் இருவரும் விவாதிக்கையில், ஒருகட்டத்தில் இளவரசர் வில்லியம் ஆபாசமாக ஹரியை திட்டியதாகவும் தகவல் வெளியானது.
மேகன் மெர்க்கல் தொடர்பில் இளவரசர் வில்லியத்திற்கு இருந்த அதே மனநிலை தான் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கும் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனாலையே, அரச குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள மேகன் மெர்க்கலுக்கு உதவ அவரால் முன்வர முடியாமல் போயுள்ளது.
இதுவே மேகனுக்கும் கேட் மிடில்டனுக்குமான மனக்கசப்புக்கு முதல் காரணமாக அமைந்துள்ளது.
மட்டுமின்றி, அரண்மனையில் கேட் மிடில்டனுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதும், ஊழியர்களால் தாம் புறக்கணிக்கப்படுவதாக ஒரு எண்ணம் மேகன் மெர்க்கலுக்கும் உருவாக அது வாய்ப்பாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கு இடையேயான மனக்கசப்புக்கும் கேட் மிடில்டனே காரணம் என மேகன் மெர்க்கல் ஆழமாக நம்புகிறார்.
மேலும், அரண்மனையில் மேகன் மெர்க்கலின் கோபத்திற்கு இலக்கான ஊழியர்களுக்கு ஆதரவாக கேட் மிடில்டன் இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஹரி மேகன் தம்பதி தனியாக குடித்தனம் செல்லும் முன்னர் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் தனிப்பட்ட ஊழியர்கள் சிலரே ஹரி- மேகன் தம்பதிக்கு பணிவிடை செய்துள்ளனர்.
ஆனால் அதிலும் பிரச்சனை ஏற்படவே, தங்களுக்கு என தனியாக ஊழியர்களை அமர்த்திக்கொள்ள ஹரி மற்றும் மேகன் தம்பதி முடிவு செய்தனர்.
அரண்மனை கட்டுப்பாடுகளுடன் மேகன் மெர்க்கலால் பொருத்தப்பட்டு செல்ல முடியாமல் போனதால், ஊழியர்களுக்கும் மேகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், அரண்மனை ஊழியர்களும் மேகனுக்கு எதிராக கிண்டல் கேலிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மொத்த சாட்சியாக கேட் மிடில்டன் இருந்துள்ளார்.
தற்போது அதுவே மிடில்டனுக்கு எதிரான அஸ்திரமாக மேகன் மெர்க்கல் பயன்படுத்தலாம் என அரண்மனை ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
