'ராயல்ஸ் அப்படிப்பட்டவர்கள் அல்ல' சொந்த மகளுக்கு எதிராக திரும்பிய மேகன் மார்கலின் தந்தை!
மேகன் மார்கலின் தந்தை தாமஸ் மார்கல் தனது மகளின் குற்றச்சட்டுகளுக்கு எதிராகவும், ராயல் குடும்பத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேகனின் தந்தை தாமஸ் மார்கல், பிரித்தானிய அரச குடும்பம் இனவெறி கொண்டது என்று தான் கருதவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், ஹரி-மேகனின் மகன் Archie-யின் நிறம் குறித்து அரச குடும்ப உறுப்பினர்கள் விமர்சித்ததாக கூறப்படும் குற்றச்சட்டுகள் உண்மையாக இருக்காது என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
அவர் "ராயல்ஸ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, பிரித்தானிய அரச குடும்பத்தினர் இனவெறி கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஆங்கிலேயர்கள் இனவெறி கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை, லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா தான் இனவெறி கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்”என்று தாமஸ் மார்கல் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், "குழந்தை எந்த நிறமாக இருக்கும் அல்லது குழந்தை எவ்வளவு கருப்பாக இருக்கும் என்பது பற்றிய விடயம் பற்றி நான் என்ன யூகிக்கிறேன் என்றால், யாரோ ஒரு முட்டாள் இப்படி கேள்வி கேட்டிருக்கலாம், அதற்காக மொத்த ராயல் குடும்பத்தினரும் இனவாதியாக இருக்க வாய்ப்பில்லை" என கூறியுள்ளார்.
மேகனின் இந்த கருத்தை விசாரிக்க வேண்டும் என்று தாமஸ் மார்கல் கூறினார்.
மேலும், தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தனது மகள் தன்னை கைவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.