இளவரசர் ஹரியை பிரிய மேகன் மெர்க்கல் முடிவு செய்துவிட்டாரா?
இளவரசர் ஹரியை பிரிய மேகன் மெர்க்கல் முடிவு செய்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்போதும் கவனத்தை ஈர்ப்பவராக இருக்க விரும்பும் மேகன் கடந்த சில வாரங்களாக பெரிதாக எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். ஏற்கனவே மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை தூக்கி எறிந்துவிட்டு, அமெரிக்க கோடீஸ்வரரை கைபிடிப்பார் என இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் காதலி லேடி விக்டோரியா சமீபத்தில் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் மேகன் வெளியே தலை காட்டாமல் ஒதுங்கியிருப்பது அவர் ஹரியை பிரிவார் என்ற ஊகங்களை அதிகப்படுத்தியிருக்கிறது. ஸ்பேர் புத்தகத்தின் விளம்பர நேர்காணல்களில் அவர் இல்லாதது மற்றும் ஹரியின் புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு மேகன் அமைதியாக இருப்பது அவர்களின் திருமணத்தில் பிரச்சனை இருப்பதாக சிலர் ஊகிக்க ஆரம்பித்துள்ளனர்.
YOUTUBE
மேகனும், ஹரியும் இணக்கமாக இல்லை எனவும், அவர்களுக்குள் உள்ள பிளவை பொதுவெளியில் விரைவில் பகிர்வார்கள் என்ற வதந்தியும் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும், ஹீட் பத்திரிக்கையின் கூற்றுபடி, மேகன் விலகி இருக்க தானாகவே முடிவு செய்தார், ஏனெனில் அவர் தான் ஒரு தனிப்பட்ட பிரபல நபராகப் பார்க்கப்பட வேண்டுமென்று நினைக்கிறார்.
இன்னொருவருடன் ஒட்டிக்கொண்டு பெயர் எடுப்பவர் என்று முத்திரை குத்தப்படுவது மேகனை எரிச்சலூட்டுகிறது. இதோடு மேகன் - ஹரி எவ்வளவு நேரம் பிரிந்து செலவிடுகிறார்களோ, அவ்வளவு அதிகமான வணிக முயற்சிகளை அவர்களால் சுயாதீனமாக செய்ய முடியும் என்றும் மேகன் நம்புவதாக கூறப்பட்டுள்ளது.
Getty images

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.