மேகனின் அதிகார தோரணை: திருமணத்திற்கு வர பயந்த தந்தை..வெளியான தகவல்
இளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு முந்தைய மாதங்களில், மேகன் மார்க்லே அதிகார தோரணையில் நடந்துகொண்டது தெரிய வந்துள்ளது.
மேகன் நடந்து கொண்ட விதம்
பத்திரிகையாளர் மற்றும் அரச வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் Sally Bedell Smith, கடந்த வாரம் தனது Substack சேனலில் வெளியான "Royal Extras"-யில் ஒரு பதிவில், மேகனின் பிரிந்த தந்தை தாமஸ் மார்க்லே மகளின் திருமணத்திற்கு வருவதற்கு பயந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான காரணங்கள் மற்றும் மேகன் நடந்து கொண்ட விதம் குறித்து பல விடயங்களை Sally அதில் கூறியுள்ளார்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த லேடி லிசா ஆன்சன், இளவரசர் ஹரி மற்றும் மேகனின் திருமண நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் மேலாளராக இருந்தார்.
ஆனால் அவர் ஹரியின் திருமணத்திற்காக வைத்திருந்த யோசனைகளை மேகன் விரைவாக நிராகரித்துள்ளார். அவர் 2017யில், ஹரி போட்ஸ்வானாவில் இருந்து இங்கிலாந்து திரும்பும்வரை 'எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது' என்று கூறியிருக்கிறார்.
பின்னர் லிசா தன்னிடம், "ஹரி வேறு வழியில் செல்ல முடிவு செய்துள்ளதாகவும், அவரது பாட்டி வேறு ஒரு நிகழ்வு மேலாளரை நியமிக்கும் முடிவில் திருப்தி அடைவதாகவும்" கூறியதாக Sally தெரிவித்துள்ளார்.
அத்துடன் "நான் ராணியுடன் பேசியபோது, அவர் சிறிதும் திருப்தி அடையவில்லை" என்று கூறினார். மேகன் பிரச்சனையாக மாறக்கூடும். அவள் விடயங்களை வேறு வழியில் பார்க்கிறாள் என லிசா குறிப்பிட்டிருக்கிறார்.
ராணியும் வருத்தமடைந்ததாக
இதற்கிடையில், ஹரி மற்றும் மேகன் திருமணத்திற்கு முந்தைய மாதங்களில், வின்ட்சர் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியுடனான டியூக்கின் உறவு விரிசல் அடைந்ததை Sally வெளிப்படுத்தினார்.
மேகனின் திருமணத்திற்கான சில திட்டங்களால் ஹரி மிகவும் வருத்தமடைந்ததால், தனது பாட்டியுடனான உறவை எப்படி சிதைத்தார் என்பதை லிசா கூறியதாக Sally வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, திருமண ஆடை பற்றி மேகன் தன்னிடம் கூறாததால், ராணியும் வருத்தமடைந்ததாக எழுதினார்.
லிசாவின் கூற்றுப்படி, வின்ட்சர் டீனின் அனுமதியை முதலில் கோராமல் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் திருமண சேவையை நடத்துமாறு கேன்டர்பரி பேராயரை ஹரி கேட்டது ராணியை திகைக்க வைத்துள்ளது.
ஆடம்பரமான வாழ்க்கை
எனினும், பிப்ரவரி மாதக் குழப்பங்களைத் தொடர்ந்து, ஏப்ரல் மாத இறுதியில் "ராணியும் ஹரியும் விடயங்களை சரிசெய்துவிட்டார்கள்" என்று லிசா கூறினார்.
ஆனால், மேகனின் தந்தை தாமஸ் மார்க்ஸ் அரச திருமணத்தில் கலந்துகொள்ள பயப்படுவதாக Sallyயிடம் லிசா கூறியிருக்கிறார்.
அவர், மேகன் அதிகாரம் செலுத்துவதாக குறிப்பிட்டிருக்கிறார். பின்னாளில் மேகன், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி விரும்பி அமெரிக்கா சென்றிருக்கிறார்.
அவர் அதிக பணம் மற்றும் இன்னும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை எதிர்பார்க்கிறார் என்று தெரிய வந்ததாகவும், அவர் பயன்படுத்தக்கூடிய அரச பட்டத்தை அவர் விரும்பியதாகவும் Sally எழுதியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |